புதிய அமைச்சரவையை அறிவிக்க மைத்திரிபால சிறிசேன முயற்சி! டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகலாம்! : த ஜெயபாலன்


Douglas_Devananda_EPDPநடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையில் அரசியல் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. அது எந்நேரமும் அரசியல் புயல் ஒன்றை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு புதிய அமைச்சரவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் கருஜெய சூரியவை பிரதமராகவும் 24 அமைச்சுக்களை உள்ளடக்கிய இந்த அமைச்சரவையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் இடம்பெற்றுள்ளார். ஆனால் அமைச்சரவையை உருவாக்கும் பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கே உரியது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அமைச்சரவை அறிவிப்பு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை கீழ்மைப்படுத்துவதாகவே அமையும். மேலும் புதிய அமைச்சரவையில் ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளின் பிரதிறிதிகளும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தேசம்நெற் இல் தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிடப்பட்டது போல் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கும் முயற்சி ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெப்ரவரி 15 இல் ஈடுபட்டு இருந்ததாக பா உ குமார வெல்கம தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் பெப்ரவரி 15 இல் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இதனத் தெரிவித்து இருந்தார். ஆனால் 19வது திருத்தம் அதற்கு இடமளிக்கவில்லை என பின்னர் தெரியவந்தது.

நேற்று பெப்ரவரி 17, தனது பிரதமர் பதவி தொடரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தான் பதவியைத் தொடர்வேன் என்று அறிவித்து உள்ளார். பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்றும் அதை நீங்கள் எதிர்கொள்ளத் தயாரா என்றும் கேட்கப்பட்டபோதுஇ அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் தமக்கான ஆதரவை பாராளுமன்றில் நிரூபிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டு யுபிஎப்ஏ கூட்டு 95 ஆசனங்களையே பெற்றது. அதில் 56 ஆசனங்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 106 ஆசனங்களை வென்ற போதும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டிராததால் தேசிய நல்லிணக்க ஆட்சியை சிறிலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டுடன் உருவாக்கியது. 16 ஆசனங்களை வென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெயரளவில் எதிர்க்கட்சியானது. எல்லாம் வரலாறு.

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அமைச்சரவை ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்கிரமசிங்க மீது அதிருப்தி கொண்ட இளம் தலைமுறையினரையும் உள்ளடக்கி உள்ளது. ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் தொடர்ந்தும் பிரதமராக செயற்படுப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனடிப்படையில் மைத்திரிபால சிசேனவின் புதிய அமைச்சரவை அறிவிப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்குளும் அதன் கூட்;டணிக்குள்ளும் பிளவை ஏற்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போது மைத்திரி – மகிந்த இணைந்து அமைச்சரவையை அமைக்க இன்னமும் 18 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது. இந்த நிலையில் இந்த அமைச்சரவை அறிவிப்பு ஐக்கிய தேசியக் கட்சியை நெருக்கடியினுள் தள்ளும்.

உள்ளுராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்த்த படியே தென்பகுதி உள்ளுராட்சி சபைகளை சுவிகரித்துள்ளமை அவரின் அரசியல் இருப்பை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தி உள்ளது. அடுத்த பொதுத் தேர்தல் இன்னும் இரு ஆண்டுகளில் நடைபெறவுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவை நோக்கி தாவுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது.
யார் ஆட்சி அமைத்தாலும் இலங்கையில் அடுத்த இரு ஆண்டுகள் ஆட்சி மிகுந்த ஸ்த்Pரத்தன்மையற்றதாகவே அமையும். ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகளும் நிறையவே உள்ளது.

புதிய அமைச்சரவையில் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீன் பிடி அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டு இருப்பது தொடர்பில் இரு தேசியக் கட்சிகளும் முரண்படுவதற்கு வாய்ப்பில்லை. இரு பகுதியினரும் நிச்சயம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதில் பின்நிற்கப் போவதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பே டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதைத் தடுத்து வந்தது. தற்போது நிலைமை அவ்வாறில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் வெற்றிபெற்றுள்ள பிரதேச சபைகளில் ஆட்சயமைக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கிகாரம் அவசியமாக உள்ளது. மேலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடுத்த பெரிய கட்சியாகவும் உள்ளது. அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடை போடவும் முடியாது.

புதிய அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1. பிரதமர் மற்றும் ஆவணப்படுத்தல் அமைச்சர் – கரு ஜயசூரிய
2. நீதியமைச்சர் – விஜயதாச ராஜபக்ஷ
3. திட்டமிடல் அமுலாக்கல் – சரத் அமுனுகம
4. நிதி மற்றும் திட்டமிடல் – எரான் விக்கிரமரட்ண
5. வெளிவிவகாரம் – வசந்த சேனாநயக்க
6. சுகாதாரம் – நிமல் ஸ்ரீபால டி சில்வா
7. கல்விஇ உயர் கல்வி – புத்திக பத்திரன
8. வர்த்தகஇ வாணிபம் – ஹர்ச டி சில்வா
9. கைத்தொழில்இ விஞ்ஞான தொழில்நுட்பம் – சுசில் பிரேமஜயந்த
10. விவசாயம்இ உணவு உற்பத்தி – மஹிந்த அமரவீர
11. மாகாணம் மற்றும் பொதுநிர்வாக உள்ளூராட்சி – ஜோன் செனவிரட்ண
12. சமூக நலன்புரி மற்றும் சுற்றுச்சுழல் – தலதா அத்துக்கோரல
1.3 வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி – சஜித் பிரேமாதாஸ
14. சுற்றுலாத்துறை மற்றும் ஊடகம் – கயந்த கருணாதிலக்க
15. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை விமான போக்குவரத்து – மஹிந்த சமரசிங்க
16. பெற்றோலிய எரிபொருள் துறை – எஸ்.பி திசாநாயக்க
17. விளையாட்டு மற்றும் கலாச்சாரம் – நவீன் திசாநயக்க
18. சமய விவகாரம் – சம்பிக்க ரணவக்க
19. மீள்நல்லிணகம் மற்றும் மீள் குடியேற்றம் – ஆறுமுகன் தொண்டமான்
20. தபால் தொலைத்தொடர்பு – ரவூப் ஹக்கீம்
21. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் – அர்ஜூன ரணதுங்க
22. தொழில் வேலைவாய்ப்பு – ரிஷாத் பதியுதீன்
23. மீன்பிடி அபிவிருத்தி – டக்ளஸ் தேவானந்தா
24. காணி மற்றும் நீர்விநியோகம் – சந்திம வீரக்கொடி

வடக்கில் தமிழ் கட்சிகள் குறிப்பாக தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிசும் யார் ஆட்சி அமைப்பது என்ற கயிறுழுப்பில் ஈடுபட்டு உள்ளன. தமிழ் காங்கிரஸின் கள்ளக் காதலனான முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் வட மகாகாண சபையை இயக்காமல் கிடப்பில் போட்டதன் விளைவாக தமிழரசுக் கட்சி தனது வாக்கு வங்கியை சற்று இழந்து நிற்கின்றது. சி வி விக்கினேஸ்வரனின் இயலாமையால் தமிழ் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொண்டது. இப்போது தமிழ் காங்கிரஸ் மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளை கைப்பற்றுவது சி வி விக்கினேஸ்வரன் போல் இந்த சபைகளுக்கு அதிகாரமில்லை இந்த சபைகளால் எதுவும் செய்ய முடியாது என்று அறிக்கை விடுவதற்காகவா அல்லது முற்றிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இச்சபைகளை அரசுடன் இணங்கி உள்ளுர் அபிவிருத்தியை முன்னெடுக்கவா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரசுடன் இணக்க அரசியலில் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக ஈடுபட்டுவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இணக்க அரசியலில் குதித்துள்ள பின்னைய இருவருக்கும் வழிவிட்டு அவர்களது கயிறுழுப்பை சற்று தள்ளியிருந்தே வேடிக்கை பார்க்கின்றது.

உங்கள் கருத்து
  1. valli-puram on February 18, 2018 9:11 am

    “தமிழ் காங்கிரஸின் கள்ளக் காதலனான முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் வட மகாகாண சபையை இயக்காமல் கிடப்பில் போட்டதன் விளைவாக தமிழரசுக் கட்சி தனது வாக்கு வங்கியை சற்று இழந்து நிற்கின்றது”

    இலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் பல்வேறுபடட குணாதிசயங்கள் உள்ளவர்கள் உள்ளார்கள். அரசியல் வாதிகள் அங்கும் இங்கும் தமது ஆதரவை தருவது ஒன்றும் புதிது அல்ல. ஆனால் பத்திரிகை துறை பத்திரிகை ஆசிரியர்கள் ஓரளவுக்காவது பன்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால் தேசமெட் ஆசிரியர் ஜெயபாலோனோ ஒரு படிப்பறிவற்ற பண்பாடற்ற முறையில் எழுதிவருவது புதிது அல்ல. ஒரு நாட்டினை குடும்ப ஆட்சியாக மாற்ற நினைத்து, லஞ்சம், கொலை, கொள்ளை, அதிகார துஸ்பிரயோகம், இப்படி கீழ்த்தரமான அரசியலை நடத்திய மஹிந்த, கோட்டாபய, டக்ளஸ் போன்றவர்களுக்கு ஆதரவு வழங்கி வந்தவர் மட்டும் அல்ல அவர்களுக்கு உடந்தையாகவும் இருந்தவர் என் பலராலும் விமர்சிக்கப்படடவர் தான் இந்த ஆசிரியர் என்பது இந்த நேரத்தில் நினைவு கூறப்படவேண்டும்


  2. Vijay Rasalingam on February 19, 2018 2:48 am

    “தமிழ் காங்கிரஸின் கள்ளக் காதலனான முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் வட மகாகாண சபையை இயக்காமல் கிடப்பில் போட்டதன் விளைவாக”

    ஜெயபாலன் நீங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து போவீர்க்அள் என நான் நினைக்கவில்லை! என்ன எச்சரித்த நண்பர்கள் சரிபோல தெரிகிறது!


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு