சம்பந்தன், சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டது


sampanthan-sumanthiranவவுனியாவில் முச்சந்தியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் சம்பந்தன் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஒரு வருட நிறைவு நாள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் ஆலயத்தின் முன்பாக ஒன்றுகூடி பதாகைகளில் பொறிக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளின் புகைப்படங்களை பார்த்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

இதனையடுத்து கோவிலுக்கு முன்பாக இருந்து கடை வீதி வழியாக ஊர்வலமாக வந்த உறவுகள் தாம் போராட்டத்தில் ஈடுபடும் இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் உருவப்பொம்மைகளை தாங்கியவாறு முச்சந்தி நோக்கி சென்ற அவர்கள் அங்கு வைத்து இறுதிக்கிரியைகளை இரு உருவப்பொம்மைகளுக்கும் முன்பாக செய்தனர்.

இந் நிலையில் போராட்ட தளத்திற்கு அருகாமையிலும் நகர்ப்புறத்தில் உள்ள வர்த்தக நிலையங்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது.

இப்போராட்டத்தில் கிறிஸ்தவ மதகுருமார் பேராட்டத்திற்கு ஆதரவான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்து
 1. BC on February 27, 2018 2:02 pm

  //வவுனியாவில் முச்சந்தியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் சம்பந்தன் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டுள்ளது.
  இப்போராட்டத்தில் கிறிஸ்தவ மதகுருமார் பேராட்டத்திற்கு ஆதரவான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.//
  உயிருடன் இருப்பவர்களுக்கு இறுதிகிரிகை செய்த இவர்கள் இரக்கமும் பண்பாடும் அற்றவர்கள். இவர்களை இப்படி மாற்றியதில் தங்கள் சுயநலனுக்காக ஏத்திவிட்டு இந்த நிலைக்கு வந்ததில் விக்கினேஸ்வரன் போன்ற தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு.

  புதிதாக சந்திரகுமாரும் அதே போல் வெளிக்கிட்டு உள்ளார். புலிகளால் பிடித்து கொள்ளபட்டு காணாமல் ஆக்கபட்டவர்கள் எவருக்கும் புலிகளோ அரசோ பதில் தர இல்லை. இப்போது இவர்களுக்கு செய்ய தயாரா இருக்கும் இறப்பு சாட்சி பத்திரம் நஷ்ட ஈடு காணாமல் போனவரின் குடும்பத்திற்கு கவுன்சலிங் இந்த வசதிகள் எதுவுமே புலிகளால் பிடித்து கொள்ளபட்டு சென்று காணாமல் ஆக்கபட்டவர்களின் பெற்றோருக்கு கூட இல்லை. அவர்களும் தமக்கு பதில்வழங்க வேண்டும் என்று இப்போது போராடலாமா?

  வவுனியாவில் நடை பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட அவர்களின் நம்பிக்கைக்கு உரிய நடக்க முடியாதவர்களை நடக்க வைக்கும் கிறிஸ்தவ மதகுருமார் நடத்த முடியாத அற்புதத்தை சர்வதேச சமூகமும் என்கின்ற மேதகு கிறிஸ்தவ மதகுருமார்கள் நடத்த போகிறார்கள் என்பது உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிகிரிகை செய்து சந்தோஷபட்டவர்களின் நம்பிக்கை.

  ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ
  வேண்டாம் யுத்தவெறி கொலை வெறி


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு