இந்திய திரை அரசி சிறிதேவி காலமானார்!!!


Sridevi_Kapurஇந்திய திரையுலக அரசி சிறிதேவி சில மணி நேரங்களுக்கு முன் பெப்ரவரி 24 இரவு டுபாயில் காலமானார். டுபாயில் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த போது மாரடைப்பினால் காலமானார். நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் நுழைந்த சிறிதேவி தனது 54 வது வயதில் காலமானார்.

தனது இளவயதில் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப்பறந்த சிறிதேவி தமிழ் நாட்டைக்கடந்த தென்னிந்தியாவிலும் பொலிவூட்டிலும் தனக்கென முத்திரை பதித்துக்கொண்டார். தனது 13வது வயதில் முக்கிய பாத்திரமேற்று நடிக்க ஆரம்பித்த சிறிதேவி தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான கமலஹாசன் ரஜனிகாந்த உடனும் மும்பாயின் முன்னனி நடசத்திரங்களான சல்மன் கான் சாரு கான் அமிர்தாப்பச்சன் ஆகியோருடனும் ஜோடியாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இன்றும் ஆண்களின் ஆதிக்கத்தில் இருக்கும் திரையுலகில் முன்னணி ஆண் நட்சந்திரங்களையும் மீறி தனக்கென முத்திரை பதித்தவர் சிறிதேவி. தமிழ்நாடு சிவகாசியில் பிறந்த இவர் மூன்று முடிச்சு இல் தனது நடிப்பின் மூலம் தனக்கென்ற முத்திரையைப் பதித்தவர். இன்றைய காலை இந்தியா சிறிதேவியின் மரணச்செய்தியுடன் விழித்துக்கொள்கிறது. சிறிதேவியின் திடீர் மரணம் இந்தியாவை யே கலங்க வைத்துள்ளது.

சிறிதேவி தனது திரையுலக வாழ்வில் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். இந்திய திரையுலகில் சிறிதேவி ஒரு சுப்பர் ஸ்ரார்.

உங்கள் கருத்து
  1. BC on March 3, 2018 1:46 pm

    இந்த சிறிதேவியை தான் இலங்கை ஊடகவியாளர் ரிஷான் செரீப் என்பவர் இலங்கை அரசு சிங்கள மாணவர்களுக்கு உரிய கல்வி பாட திட்டத்தில் தமிழர்கள் அழகு இல்லாதவர்கள் ஆனால் சிறிதேவி மட்டும் ஒரு தமிழ்பெண் ஆக இருந்தாலும் அழகானவர் என்று
    சிங்களவர்களுக்கு இலங்கை பாடசாலைகளில் படிப்பிக்கிறது என்று எழுதி இந்தியா தமிழ்நாட்டிலும் புலம் பெயர் புலிகளிடமும் பெரும் புகழை தனக்கு பெற்று கொண்டார். இப்போது மரணமடைந்த தமிழ் சிறிதேவிக்கு இந்திய மகாராஷ்டிரா அரசு முழு அரசு மரியாதைகளுடன் இறுதி கிரிகை செய்துள்ளது இதை தமிழீழ கோட்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரமா எடுத்து கொள்ளலாம்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு