வெளிவந்தது இலங்கையின் பணக்கார அரசியல்வாதிகள் பட்டியல்; கருணா ஐந்தாமிடம்


1517216005202இலங்கையின் அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது.

இந்த வரிசையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவும். இவர்களது சொத்து மதிப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை விட அதிகமாக இருப்பது ஆச்சரியமான அதிர்ச்சியளிக்கும் தகவல்.

அந்த சஞ்சிகையின் படி முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான் முதலிடம், அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி டொலர். இலங்கை ரூபாவின் படி சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபா.

முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகள் விபரம்;

முதலாமிடம் – மஹிந்த ராஜபக்க்ஷ (18 பில்லியன் டொலர்)

இரண்டாமிடம் – அமைச்சர் அர்ஜின ரணதூங்க (6 கோடி 80 லட்சம் டொலர்)

மூன்றாமிடம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (1கோடி 40 லட்சம் டொலர்)

நான்காமிடம் – ஆறுமுகம் தொண்டமான் (19 லட்சம் டொலர்)

ஐந்தாமிடம் – கருணா (17 லட்சம் டொலர்)

ஆறாமிடம் – ஏ.எச்.எம். பௌசி (14 லட்சம் டொலர்)

ஏழாமிடம் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (14 லட்சம் டொலர்)

எட்டாம் இடம் – ஜே.வி.பியின் எம்.பியான அனுரகுமார திஸாநாயக்க (13 லட்சம் டொலர்)

ஒன்பதாம் இடம் – ஏ.எல்.எம். அதாவுதுல்லா (9 லட்சம் டொலர்)

பத்தாம் இடம் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்)

இந்த பெறுமதியை இலங்கை ரூபாவில் அறிய விரும்புவோர் 154 ஆல் பெருக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கருத்து
  1. valli-puram on February 25, 2018 3:54 pm

    முதலாம் இடத்தை பிடித்தவர் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாளில் மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என துடிப்பவரும் பல கொலை கொள்ளைகளை, பதவி துஸ்பிரயோகம், லஞ்சம் ஊழல்களை குடும்பமாக செய்த மாபெரும் சிங்கள பேரினவாதத்தின் தலைவன். 18 பில்லியன் என்பது எதனை கோடி என்பதையும் அவரின் கீழ் உள்ளவர்களின் ஒட்டுமொத்த தொகையைவிட மிக பான் மடங்கு அதிகமானது என்பதையும் புரிந்து கொள்ளலாம். இதனை பில்லியன் பணத்தை சூறையாடுவதற்கு உதவி புரிந்தவர்கள் வரிசையில் இடதுசாரிகள் என்று தம்மை பிதற்றி கொள்பவர்கள் இப்ப்போதும் துணையாக இருக்கிறார்கள் என்னும்போது நாம் என்ன சொல்லமுடியும். இந்த இடதுசாரியம் முதலாளித்துவத்தை விட எதனை கோடி கொடுமையானது என்பது பொது மக்களுக்கு புரியாது இருப்பது வேதனை தரும் விடயம். மஹிந்தவுடன் கூட்டு சேர்ந்ததனால் தொழிலாளர்களின் தொண்டனாக காட்டிய தொண்டைமானுக்கு புலிகளை காட்டிக்கொடுத்ததனால் கருணா அம்மான் கோடீஸ்வரர் ஆனதும் தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த கோடி புண்ணியம்.பாவம் டக்லஸ் அம்மான் இந்த வரிசையில் இல்லாவிடடாலும் கிடட இருப்பார் என்று நம்பலாம்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு