காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களுடன் திரும்ப வேண்டி பிரார்த்திக்கின்றோம் – யப்பான் புத்த துறவிகள்


IMG_3859இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீண்டும் உறவினர்களுடன் சேர்ந்துகொள்ள நாங்கள் பிரார்த்திப்போம் என யப்பான் நாட்டைச் சேர்ந்த  பௌத்த துறவிகள் தெரிவித்துள்ளனர்
போனினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான சர்வமத வழிபாட்டு ஊர்வலம் மேற்கொள்ளும் குழு இன்று(26) கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தனர்.
 கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 372 நாட்களாக தமது காணாமல் ஆ்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை குறித்த குழுவினர் இன்று பகல் சந்தித்து வழிபாட்டினையும் முன்னெடுத்தனர்.
 ஜப்பான், ஐரோப்பா, இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பௌத்த துறவிகள் குறித்த மக்களை சந்தித்தனர். உலக அமைதி பணியில் “நிப்பொன்சன் மியொஹொஜி” ஜப்பான் புத்த துறவிகளே இன்று அம்மக்களை சந்தித்து பேசியதுடன், விசேட வழிபாட்டினையும் முன்னெடுத்திருந்தனர்.

 

உங்கள் கருத்து
 1. Vijay Rasalingam on February 26, 2018 8:33 pm

  பிரார்த்தனை அது இது என கதை விடுவதை விட்டு ஸ்ரீலங்காவில் இந்த இன அழிப்புக்கு காரணமான பெளத்த-சிங்கள தேசிய வாதத்துக்கு முண்டு கொடுக்கும் பெளத்த பீடாதிபதிகளைச் சந்திச்சு புத்தரின் போதனைகளை கொஞ்சம் சொல்லிக்கொடுத்து அவர்களை உணரப்பண்ணலாமே?
  அதை விடுத்து கிளிநொச்சிக்கு ஜப்பான்காரர் போய் பிரார்த்தனை பண்ணுகினமாம்!

  போர்நடந்தபோது அப்பப்ப இன்ரநசனல் லெவலில் ஏதாவது சிக்கல் வரும்போது சொல்லிவச்ச மாதிரி ஜப்பானில் இருந்து அகாசி எண்ட ஒர்வர் வருவார்….சிக்கல் திசைதுருப்பப்படும்!

  ஸ்ரீலங்காவுக்கு பிரசர் குறைக்கப்படும்!

  இப்ப அவரைக்காணேல்ல புதிசா ஆக்கள் வந்திருக்கினம்..ஓ ஓ இப்பதானே விளங்குது…மார்ச்சில ஐநா மனித உரிமை கூட்டம் வருகுது, ஜப்பானில் இருந்து புது ஆக்கள் வருகினம்!


 2. Vijay Rasalingam on February 26, 2018 8:37 pm

  ஜப்பான், ஐரோப்பா, இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த எண்டிருக்கு…படத்தில எல்லாம் ஜப்பான் மூஞ்சியாகவே இருக்கு!!!!


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு