32 மில்லியன் ரூபா நிதி தொடர்பில் அனந்தி சசிதரன் மீது சி.வி.கே குற்றச்சாட்டு!


sivagnanam-1ஆளுநர் செயயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேட்சை நித்தியத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துக்கு கிடைத்த 32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம் பெறாது செலவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் ஆனந்தி சசிதரனும் அவரது அமைச்சின் கீழ் உள்ள அதிகாரிகளுமே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

இவ்வாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் அவைத் தலைவர் அறிவித்தல்களை அறிவிக்கும் போது மேற்கண்டவாறு அறிவித்தார்.

அவர் தெரிவித்தாவது-

ஆளுநர் செயயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேச்சை நிதியத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துக்கு கிடைத்த 32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம் பெறாமல் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செலவீனத்துக்கு மாகாண சபை பொறுப்பேற்காது. அதற்கான அங்கீகாரத்தையும் வழங்க முடியாது. இது தொடர்பில் கணக்காய்வு திணைக்களம் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.- என்றார்.

கடந்த காலங்களில் ஆளுநர் நிதியத்தின் ஊடாக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளுவதற்கு 144 மில்லியன் ரூபா வரையில் கூட்டுறவுத் திணைக்களம் உட்பட பல்வேறு திணைக்களங்களில் நிதி பெறப்பட்டது. அந்த நிதி முறைமை தவறானது என்று பல்வேறு தரப்பினராலும் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டப் பட்டது.

அதைக்கருத்தில் கொண்டு மக்களின் நன்மை கருதி கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்திடம் இருந்து பெறப்பட்ட நிதியை ஈடுசெய்வதற்கு ஆளுநர் செயயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேச்சை நிதியத்திலிருந்து 32 மில்லியன் ரூபா அண்மையில் விடுவிக்கப்பட்டது.

இந்த நிதியியை மாகாண கூட்டுறவு திணைக்களத்தால் பரிந்துரைகள்மூலம் 21 கூட்டுறவு சங்கங்களின் கிராமிய வங்கிகள் மூலம் மக்கள் பயன்படும் வகையில் வகையில் பயப்படுத்துவதற்கு 54 ஆவது அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது . பயனாளிகள் தெரிவு செய்யப்படும் போது கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாகவும், போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களாகவும் இருக்க வேண்டும் என்றும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

நிதி கையாளப்பட்டபோது சபையின் அங்கீகாரம் பெறப்படவில்லை. இந்த நிதிக்கு மாகாண சபை அங்கீகாரம் வழங்காது. பொறுப்பும் ஏற்காது என அவைத்தலைவர் தெரிவித்தார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு