வட மாகாணசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு பின் விடுதலை


ravikaran2வடக்கு மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (28) காலை முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுவாகல் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மக்களின் காணிகளை கடற்படை முகாம் அமைப்பதற்காக அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் ரவிகரன் இன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட அவரை இன்று (28) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு