வடக்கை குறிவைக்கும் சிங்கள நியமனங்கள் !!! தமிழ்த் தலைமைகள் மௌனம்


appointmentவடமாகாணத்தில் அரச திணைக்களங்கள், சபைகளுக்கு சிங்களவர்களை நியமிக்கும் நடவடிக்கையில் நல்லாட்சி அரசாங்கம் தீவிரம் காண்பித்துவருகின்றது.

வடக்கு மாகாணதில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகளிளும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் வேலையற்று இருக்கும் சூழ்நிநலையில் தெற்கிலிருந்து அரச திணைக்களங்களுக்கு சிற்றூழியர் முதல் பணியாளர்களை இறக்குமதி செய்வது குறித்து திணைக்களங்களில் பணியாற்றும் அதிகாரிகளும் மக்களும் விசனமடைந்துள்ளனர்.

அவ்வகையில் இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு 15 சிங்கள மானிவாசிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் மின்சாரசபையினால் யாழ்ப்பாணத்தில் இரண்டு கட்டங்களாக சிங்களவர்கள் அழைக்கப்பட்டு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு மானி வாசிப்பு மற்றும் வாகன சாரதி பதவிகள் வழங்கப்பட்டன. நேர்முகத் தேர்வுகளின்போது இங்குள்ள அதிகாரிகளால் சிங்கள வாகன சாரதிகள் நிராகரிக்கப்படக்கூடிய சூழலில் நேர்முகத் தேர்வு அதிகாரிகளும் கொழும்பிலிருந்தே வரவளைக்கப்பட்டு நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டச் செலயகத்தில் ஊடகப் பிரிவிக்கு பொறுப்பாக ஓய்வுபெற்ற சிங்களவர் பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பணிக்கு நியமிக்கப்பட்ட பின் மாவட்டச் செயலக செய்திகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த தகவ்கள் தமக்குக் கிடைப்பாதில்லை என ஊடகவியலாளர்களால் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்யப்பட்டுவருகின்றது.
கடந்தவரம் கச்சதீவு அந்தோனியர் ஆலய திருவிழாவிற்குச் செல்வதற்கான ஊடகவிலயார்களின் அனுமதி விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் குறித்த அதிகாரி மிக அசண்டையீனமாக நடந்துகொண்டதாக ஊடகவியலாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இதனைவிட வீதி அபிவிருத்தி அதிகாரசபை, சமுர்த்தி அதிகாரசபை, பிரதேசசெயலகங்கள் உட்பட முக்கிய பொறுப்புகளுக்கு சிங்களவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர். வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சிற்றூழியர் தொடக்கம் அதிகாரிகள் வரை பெருமளவில் சிங்களவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகத்திலுள்ளும் சிங்களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுவருவதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் சபைகளின் மாவட்ட தலைமை பதவிகளுக்கு சிங்களவர்கள் நியமிக்கப்படுவதால் தீர்மானத்தை எடுப்பவர்களாக அவர்களே உள்ளனர். பொதுமக்கள் தமது பிரச்சினைகளை அவர்களிடம் எடுத்துக்கூற முடியாத மொழிப்பிரச்சினை காணப்படுகிறது என யாழ். மாவட்ட பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

சிங்கள அதிகாரிகளுக்கு தமிழ், ஆங்கில மொழிகள் அறவே தெரியாது. வடபகுதி பொதுமக்களுக்கு சிங்களம் தெரியாது. இதனால் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
ஏற்கனவே வவுனியா,மன்னார் பகுதிகளில் அரச அதிபர்கள் உள்ளிட்ட உயர்பதவிகளில் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டு வந்திருந்தனர்.
தற்போது பாடசாலை உதவியாளர்கள், மின்மானி வாசிப்பாளர்கள் போன்ற பதவிகளிற்கும் சிங்களவர்கள் சத்தமின்றி நியமிக்கப்பட்டுவருகின்றனர்.

எனினும் இவைகுறித்து தமிழ் அரசியல் தலைமைகள் கண்டுகொள்ளாத போக்கே தொடர்ந்துவருகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கட்டிப்பிடித்துக்கொண்டும் ஏனைய சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டும் இருக்கும் தமிழ்த் தலைமைகள் உஸ்ஸ்ஸ்ஸ்………….உதுகளைப் பற்றிக் கதைத்தால் நல்லாட்சி கவிழ்ந்துவிடும் நல்லாட்சி கவிழ்ந்தால் தீர்வு கிடைக்காது போய்விடும் என தொடர்ந்தும் உறங்கிவிடப் போகின்றார்களா ?

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு