தியத்தலாவை பேரூந்து குண்டு வெடிப்பு : குண்டைக்கொண்டு சென்றவர் கைது


bus-caught-fire-in-kahagolla-in-bandarawela-diyatalawa-sri-lankaதியத்தலாவை பேரூந்து குண்டுவெடிப்புச்  சம்பவம் தொடர்பில் கைக்குண்டை கொண்டு சென்ற இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்

கடந்த மாதம் 21 ஆம் திகதி காலை தியத்தலாவை –கஹகொல்ல பகுதியில் தனியார் பேரூந்தொன்றில் ஏற்பட்ட வெடிப்பையடுத்து ஏற்பட்ட தீயில் சிக்கி 7 இராணுவத்தினரும் 5 விமானப்படை வீரரரும் 7 பொதுமக்களும் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில்  பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இராணுவவீரர் எடுத்துச்சென்ற கைக்குண்டே வெடித்ததாக தெரியவந்தது. குறித்த இராணுவ வீரரும் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில், அவர் இன்று கைதுசெய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு