முள்ளிவாய்க்காலில் சம்மந்தனை எதிர்த்து கேள்வி எழுப்பிய பெண் சமாதான நீதவான் பதவியை பெறுவதில் சிக்கல்


IMG_8045கடந்த 2017 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் சம்மந்தனை எதிர்த்து கேள்வி எழுப்பிய பெண்ணுக்கு  வழங்கப்பட்ட சமாதான நீதவான் பதவியை பெறுவதில்  ததேகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தடையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லதா கோடீஸ்வரன் என்பவருக்கு கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சமாதான பதவிக்கான விண்ணப்பத்தை வழங்கியிருந்தார்.  அதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை தொடர்ந்து 2017.10.13 அன்றைய வர்த்தமானிப் பத்திரிகையில் 66 வது பெயராக தீவு முழுவதற்குமான சமாதான நீதவானாக குறிப்பிட்டு வெளியிடப்பட்;டிருந்தது.
இதனை அறிவிக்கும் வகையில் 2017.10.17 திகதியிடப்பட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. குறித்த கடிதத்தில்  வர்த்தமானி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட திகதியான 2017.10.13 திகதியிலிருந்து ஆறு மாதக் காலத்திற்குள்  நீதிமன்றம் ஒன்றில் சத்தியபிரமானம் செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நியமனம் குறித்து நீதி அமைச்சினால்  அனுப்பிவைக்கப்பட்ட  நியமனம் மற்றும் சத்தியபிரமானம் செய்யும் படிவம் என்பன இதுவரை லதா கோடீஸ்வரனுக்கு  கிடைக்கப்பெறவில்லை, இந்த கடிதங்கள் பெரும்பாலும் எந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊடமாக சமாதான நீதவான் பதவிக்கு விண்ணப்பிக்கப்பட்டதோ அவர்களின் மூலம் வழங்கப்படுவதும் வழக்கமாகும்  எனவே  லதா கோடீஸ்வரனுக்கு வழங்கப்பட்ட கடிதத்தை குறித்த பாராளுமன்ற உறுப்பினர்  வழங்காது தடுத்து வைத்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மூலம் விண்ணப்பித்த ஏனையவர்களுக்கு மேற்குறிப்பிட்ட கடிதங்கள் அவர் மூலமாக கிடைக்கப்பெற்று அவர்கள்  சத்தியபிரமானமும் செய்துகொண்டனர். ஆனால் இவருக்கு மட்டும்  குறித்த கடிதங்கள் கிடைக்கப்பெறவில்லை.
கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பேசிய எதிர்கட்சித் தலைவர் சம்மந்தன் அவர்களை  இந்த இடத்தில் அரசியல்  பேசவேண்டாம் என லதா கோடீஸ்வரன் பகிரங்கமாக  அனைவரும் முன்னிலையிலும் தடுத்திருந்தார்.
இதன் பின்னர் அவரை தொடர்பு கொண்ட குறித்த  பாராளுமன்ற உறுப்பினர் அவரை எச்சரித்ததோடு,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை மக்கள் முன் எதிர்த்து கேள்விக் கேட்டமைக்காக கடுமையாக கடிந்தும் கொண்டார்
அதன் விளைவே அவருக்கு கிடைக்க  வேண்டிய சமாதான நீதவான் நியமனம் மற்றும் சத்தியபிரமான கடிதங்கள் கிடைக்காது போய்விட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குறிப்பிட்ட ஆறுமாதக் காலம் இம்மாதத்துடன் நிறைவுப்பெறவுள்ளது என்;பதும் குறிப்பிடத்தக்கது

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு