கண்டியில் பதற்றம் நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்


625.0.560.320.160.600.053.800.700.160.90கண்டி, திகன நகரில் அசாதாரண சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்தவும் அங்கிருந்த குழுக்களை கலைப்பதற்காகவும் இவ்வாறு கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை (06) காலை ஆறு மணிவரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

சம்பவ பின்னணி

குறித்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த நபர், நேற்று முன்தினம் மரணமடைந்தார்.   முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்கள் குழுக்களுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளது  இதில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்

இதனால் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்பாடமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, குறித்த சம்பவத்திற்கு எதிராக தெல்தெனிய நகரிலுள்ள 2 கடைகள் மீது நேற்றைய தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சிலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை

கண்டி நிர்வாக மாவட்டத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளும் நாளை (06) மூடப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கண்டி, திகன நகரில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை (06) காலை ஆறு மணிவரையில் அமுலில் இருப்பதால் கண்டி நிர்வாக மாவட்டத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு