கண்டி சம்பவத்தினை தொடர்ந்து பாதுகாப்பினை உறுதி செய்ய ஜனாதிபதி பொலீஸாருக்கு உத்தரவு


Maithiri1கண்டி – திகன பகுதியில் இன்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து நடுநிலையானதும், சுயாதீனமானதுமான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை  பிரதேசத்தின் அனைத்து மக்களினதும் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு சிறப்பு வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துமாறும் பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேபோல்  ஏற்படக்கூடிய நிலைமைகளை தடுப்பதற்காக அனைத்து தரப்பினருடனும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பான  விசாரணைகளை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினரை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு