ததேகூட்டமைப்புக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் – மாவை


mavaiபுதிய தேர்தல் முறையினாலும், பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டமையினால் வாக்குகள் பிளவுப்பட்ட காரணத்தினாலும், இனப்பிரச்சினை தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்ட ஜயம் காரணமாகவும், இராணுவத்தின் பிடியில்  காணிகள் விடுவிக்கப்படாமையினாலும், அபிவிருத்தி தொடர்பில் எம் மீது விமர்சனங்களும்  வெறுப்புகளும்  காரணமாக ததேகூ  தேர்தலில் பின்னடைவவை சந்தித்துள்ளதனை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் என்று தமிழரசு  கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா  தெரிவித்துள்ளார்.

இன்று(05) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
கிளிநொச்சியிலும் இந்த பின்னடைவு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளுராதட்சி மன்ற உறுப்பினர்களிடம் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் பெரும்பாலான வட்டாரங்களில் ததேகூட்டமைப்பே வெற்றிப்பெற்றுள்ளது. இந்த பின்னடைவு பற்றி ஆராய்ந்து  ஏன் இந்த பின்னடைவு ஏற்பட்டது  என்பதையும் கவனத்தில் கொண்டு  ததேகூட்டமைப்பை பலம் பொருந்திய சக்தியாக மாற்றுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிளிநொச்சியில் இடம்பெற்ற இன்றைய கூட்டத்திலும் இது தொடர்பில்  ஆராயப்பட்டது எனத் தெரிவித்த அவர்
பெரும்பான்மை பெற முடியாத சபைகளில் எந்த கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்பதனை இன்னும் குறிப்பிடவில்லை அது பற்றி பொது நிறுவனங்கள் சிவில் சமூகத்தவர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்க கூடிய ததேகூட்டமைப்புக்கு நிர்வாகத்தை குழப்பாமல் நிர்வாகத்தை ஆதரித்து நிற்க கூடியவாறு நிர்வாகத்தை கொண்டு செல்வதற்கு பல கட்சிகளிடம் சமூக அமைப்புக்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள், இருபதாம்  திகதி முன் ஏனைய பொது நிறுவனங்கள் அமைப்புகளுடைய கருத்துக்களைஅறிந்து யார் யார் எங்களை  ஆதரிக்க முடியும், யார் வெளியிலிருந்து ஆதரவு வழங்க முடியும், என்பதை அறிந்து சபையை திறம்படி நடத்திச் செல்லக் கூடிய எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம்.
காணாமல் போனோர்  அலுவலகத்தையும், அந்த உறுப்பினர்களையும் ஏற்றுக்கொள்கின்றீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்
இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையாகவே பார்க்கின்றோம், இது கூட இடம்பெறவில்லை என்றால்  எந்த முன்னேற்றமும் ஏற்படாது. ததேகூட்டமைப்பும், வல்லரசு நாடுகளும் இணைந்து எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கைதான்.
ஆனாலும் இது எவ்வளவு தூரம் நம்பகத்தன்மைகொண்டதாகவும், மக்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு அந்த மக்களை நம்ப  வைக்க கூடியதாகவும் தங்களின் ஆய்வுகளை நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றார்கள் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எந்த அலுவலகமாக இருந்தாலும் அது மக்களின் நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும்.எனக் குறிப்பிட்ட அவரிடம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ததேகூட்டமைப்பும் ஆதரவு வழங்குமா எனக் கேள்வி எழுப்பிய போது
அது தொடர்பில்  ததேகூட்டமைப்பு மிகவும் கவனமாக இருக்கிறது அந்த பிரேரணை எந்தெந்த அடிப்படையில் வருகிறது என்பதனை நாங்கள் ஆராய்வோம் நாளை அல்லது நாளை மறுதினம் எங்களுடை பாராளுமன்றக் குழு இந்த விடயத்தில் கூடி ஆராய்ந்து உரிய நடவடிக்கையை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றார்
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு