அசம்பாவிதங்களின் முக்கிய நோக்கம் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதே


1520335513-hakeem-Lநாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து படுகுழியில் தள்ளுவதற்கும் இழிவுபடுத்தி மக்களின் பொருளாதார நிலையை சீர்குலைப்பதே திகன மற்றும் தெல்தெனிய பிரதேசத்தில் ஏற்பட்ட சம்பவங்களின் முக்கிய நோக்கமாகும் என்று நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 23 (2) கீழ் உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயங்களை இன்று குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் திட்டமிட்ட குழு மற்றும் தனிப்பட்ட நபர் சதித்திட்டத்திலும் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதாகும் என்று தெளிவாகின்றது.

இவ்வாறான நெருக்கடியான சம்பவம் கண்டி மாவட்டத்தில் திகன மற்றும் தெல்தெனியவில் இடம்பெற்றுள்ளமை துரதிஷ்டமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த வன்முறை சம்பவம் பல தீய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதென்பது தெளிவாகின்றது.

தற்பொழுது ஓரளவுக்கு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி , பிரதமர் , சிரமம்பாராது செயற்படும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவம் எதிர்காலத்திலும் ஏற்படுத்துவதற்கு பெருமளவில் இடமுண்டு. இவ்வாறான நோக்கம் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதே ஆகும் என்பது தெளிவாகின்றது.

இனங்களுக்கிடையே நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை சர்வதேசம் எமக்கு வகுத்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு