வவுனியாவில் டயர் எரிக்கப்பட்ட சம்பவத்தினை அடுத்து இன்று அவசர சந்திப்பு


625.0.560.320.160.600.053.800.700.160.90வவுனியாவில் சர்வமத தலைவர்கள் மற்றும் முப்படையினர் பொலிஸாரை அழைத்து அரசாங்க அதிபர் அவசர சந்திப்பொன்றினை இன்று மேற்கொண்டார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில்  இன்று 2 மணியளவில்  அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமையில் ஆரம்பமான இச் சந்திப்பில் சர்வ மத தலைவர்கள் கலந்துகொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.

வவுனியாவில் நேற்றைய தினம் மதினாநகர் பள்ளிவாசலுக்கு முன்பாக இனந்தெரியாதோரால் டயர் எரிக்கப்பட்ட சம்பவத்தினை அடுத்து அவசரமான இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் வவுனியா மாவட்டத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாமல் அனைவரும் ஒத்துழைக்க வெண்டும் என சர்வ மத தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதன்போது பொலிஸ் அதிகாரிகள், இராணுவ, விமானப்படை, கடற்படை உயர் அதிகாரிகள், வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு