கிளிநொச்சியில் தமிழ் அமெரிக்க பிரஜை கொலை, வைத்தியர் பலி


DSC_0166அமெரிக்க  பிரஜாவுரிமை பெற்ற இலஙடகையர் ஒருவர் கிளிநொச்சியில்  கொலை செய்யப்பட்டுள்ளார் என கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இனந்தெரியாத நபர்களால் நேற்று(06) இரவு தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(07) உயிரிழந்துள்ளார்
கிளிநொச்சி  செல்வாநகரை சேர்ந்த  71 வயது இரத்தினம் துரைசிங்கம் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
மேற்படி கொலை செய்யப்பட்ட நபர் அமெரிக்க நாட்டின் பிராஜாவுரிமை பெற்றவர் எனவும் அவரது பிள்ளைகள் கனடாவில் வாழ்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் அவரது காணியில் அமைந்துள்ள வீட்டினைப் பார்வையிட வருகைதந்த போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்
கிளிநொச்சி பூநகரி   பகுதியில்  பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முழங்காவில் பொலிஸ் பியிவுக்குட்பட்ட A32 யாழ் மன்னார் பிரதான வீதி மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிக வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதியதன் காரணமாக ஏற்பட்ட விபத்தில்.  மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் யாழ் கரவெட்டி பகுதியை சேர்ந்த 41 வயதான வைத்தியர்  ஒருவரே உயிரிழந்துள்ளார்.   எனத் தெரிய வருகிறது
இதேவேளை
சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை முழங்காவில் காவல்துததுறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு