இலங்கையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் குறித்து ஐ.நா கவலை


38665296_303இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இதற்காக உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நேற்று (07) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆணையாளர் அதில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறைகளை அடுத்து, நாடளாவிய ரீதியாக அவசரகாலச சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் எச்சரிக்கை அடைந்துள்ளேன்.

இலங்கை அரசாங்கம் நிலைமாறு கால நீதி நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த வேண்டும். அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் இல்லாமையையிட்டு நான் கவலையடைகிறேன்.

பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறு கால நீதியின் முன்னேற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் அவசியமானது.

இதில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில், உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளை ஊக்குவிக்கவுள்ளேன்.

இது தொடர்பாக எதிர்வரும் 21 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முழுமையான விளக்கம் அளிக்கவுள்ளேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு