இலங்கையில் இனவாதம், இனவெறிக்கு எதிராக அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டும்! : NRTSL


Mosoque_Destroyedகடந்த காலத்தின் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளின் பாடங்கள் எதிர்காலத்தைக் கடந்து செல்லும் அனுபவங்களைத் தந்திருக்க வேண்டும். ஆனால் துன்பகரமான நிலை என்னவெனில் மிகவும் பலவீன நிலையில் உள்ள அமைதி சகல சமூகங்களிலும் காணப்படும் ஏனைய இனங்களுக்கெதிராக இயங்கும் சிறு தொகையான பலமுடைய சக்திகளால் மேலும் நாட்டினை ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகிறது.

தற்போது இடம்பெற்று வரும் அரசியல் நோக்கங்களுடன் நடத்தப்படும் முஸ்லீம் மக்களுக்கெதிரான இன வன்முறை இரு இனங்களிடையேயான சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாகவும் மாறியுள்ளமை தொடர்பாக புலம்பெயர் இலங்கையர் – தமிழர் (NRTSL ) அமைப்பு கண்டிக்கிறது. கவலை தரும் விதத்;தில் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்கள் அதி தீவிரவாத அரசியல் சக்திகளால் ஆழமாக வளர்த்தெடுக்கப்பட்ட இன வெறுப்புணர்வுகளை எடுத்துக் காட்டுகின்றன. சட்டம், ஒழுங்கு சரியாக உரிய வேளையில் செயற்படாமையே வேறு சில மாவட்டங்களிலுள்ள முஸ்லீம் மக்களுக்கு எதிராக இவ் வன்முறை விஸ்தரித்துச் செல்வதற்கான காரணமாக இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் பார்க்குமிடத்து குற்றம் புரிந்தவர்கள் அங்கு சுதந்திரமாக நடமாடுவது அரச பொறிமுறை அப்பாவி மக்களைக் காப்பாற்றாமல் செயலிழந்துள்ளதை தெளிவாகக் காட்டுகிறது.

இனவாத வெறுப்பேற்றும் சக்திகளுக்கு எதிராக சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அரசியல் தலைவர்களை புலம்பெயர் இலங்கைத் தமிழர் அமைப்பு வேண்டுகிறது. இனவாதம், இனவெறி நெருக்கடிகள் என்ற கடந்த கால துன்பகரமான வரலாறுகளிலிருந்து மீண்டு சட்டம், ஒழுங்குப் பொறிமுறை செயற்படும் ஒரு நாடாக வெளி வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இம் மாதிரியான நிலை ஏற்பட வேண்டுமெனில் சுயாதீன அரசு நிர்வாகமும், பொறுப்புக் கூறலுடன் இணைந்த சட்டம், ஒழுங்குச் செயற்பாட்டுப் பொறிமுறையும், நடுநிலையான ஊடகங்களும், சுயாதீன நீதித்துறையும் அமைந்த ஆட்சிமுறை அமைந்தால் மட்டுமே சகல சமூகங்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.

இனவாதத்திற்கு எதிராகவும், வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் உரைகளுக்கு எதிராகவும் வெளிப்படையாகவும், காத்திரமான விதத்திலும் செயற்படாத வரையில் இந்த வெறுப்புணர்வுகளைத் தூண்டும் தீவிரவாதிகளால் சமூகங்கள் புறம் ஒதுக்கப்படுவதும், தனி நபர்கள் ஆபத்திற்குள்ளாவதும், சமூகங்கள் இலக்கு வைக்கப்படுவதும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். அத்துடன் இக் கொடுமையாளர்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட முடியும் என்ற தைரியத்தையும் பெறும் ஆபத்து உண்டு.

இத் தருணத்தில் அரசாங்கமும், சிவில் சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட்டு இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தையும், குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் இன, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த உதவுமாறு புலம்பெயர் இலங்கைத் தமிழர் அமைப்பு வேண்டுகொள் விடுக்கிறது.

Political leaders and media have a pivotal role to play to counter racism and communal violence in Sri Lanka.

Traumatic experiences of the past should be lessons to overcome the adversities in the future. Sadly, roots of xenophobic intolerance of powerful few within all communities in Sri Lanka are endangering the fragile stability of our country further.

The NRTSL condemn the latest round of politically motivated communal violence against the Muslim community that has triggered by a law and order issue between individuals of the two communities. The ongoing tragic incidents illustrate the deep down racial tensions and hatred nurtured by extremist political elements. The failure of the law enforcement agencies to swiftly respond to this incident is the root cause of the escalation of the ongoing wide spread attacks on Muslim community in certain districts. The news reports coming from the affected areas indicate that the promoters of violence are roaming freely; is a clear sign of a let-down of the state mechanisms to safeguard the innocent people.

The NRTSL calls upon the political leaders of all communities to unequivocally denounce racism and combat xenophobic intolerance. Sri Lanka must emerge out of its tainted history of racial tensions and communal violence by strengthening its laws and regulatory mechanisms. The transformation in the system of governance that encompass independent civil service, accountable and regulated law and order mechanisms, unbiased media and independent judiciary needs to be established to give confidence to the people of all communities.

The failure to counter racism and hate violence in effective and outspoken manner contributes to further marginalisation and vulnerability of the individuals and communities targeted by the hate driven extremists. In addition, it risks giving the perpetrators who engage in racially motivated crimes a sense of impunity.

The NRTSL appeal for effective co-operation between government and civil society to ensure that the victims of racist violence are heard and the perpetrators are brought to justice regardless of their political or religious affiliations.

V.Sivalingam
President NRTSL

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு