பிரித்தானிய – ரஸ்ய இராஜதந்திர உறவு நெருக்கடியில்! கருத்துச் சுதந்திரத்தை பணயம் வைக்கின்றது பிபிசி!


BBC_Shame_on_youபிரித்தானியாவில் ரஸ்ய தொலைக்காட்சி சேவையான ஆர்ரி இன்ரநஷனலை தடை செய்ய வேண்டும் என்ற வகையில் பிபிசி செய்தியாளர்கள் தெரிவிப்பதுடன் அரசியல் வாதிகளை தடை செய்வதை நோக்கி தள்ளுகின்ற வகையில் கருத்துக்களை வைப்பதுடன் அத்திசை வழியே கேள்விகளையும் எழுப்புகின்றது.

கருத்துச் சுதந்திரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய பிபிசி தனது ஊடக தர்மத்தில் இருந்து விலகி ஆர்ரி இன்ரநஷனலை தடைசெய்ய பியரத்தனங்களை மேற்கொண்டு வரகின்றது.

பழமைவாதக் கட்சியும் ஆட்சியில் உள்ளதுமான கொன்சவேடிவ் கட்சியின் பா உ அன்ரு மிச்சல் நேற்றைய நியூஸ் நைற் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு “சிரியா விவகாரத்தில் விளாடிமீர் பூட்டினை கடுமையாக நான் விமர்சித்ததையும் அவர்கள் ஒளிபரப்பி உள்ளனர். ஊடகங்கள் தகவல்களை கொண்டு சேர்க்கட்டும். மக்கள் விடயத்தை பகுத்து அறிந்துகொள்வார்கள்” என நியூஸ் நைற் தொகுப்பாளர் ஆர்ரி பக்கசார்பாக செய்திகளை வெளியிடுவதால் அதனை தடைசெய்ய கோரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். இதே கருத்துக்களும் கேள்விகளும் பிபிசி தொலைக்காட்சி வானொலிச் செய்திகளின் போதும் பலர் முன் வைக்கப்பட்டதுடன் கேள்விகளும் எழுப்பப்பட்டது.

ஆர்ரி பிபிசி மற்றும் அமெரிக்க ஊடகங்களின் நம்பகத் தன்மையை ஆதாரங்களோடு வெளியிட்டு வருவதாலும் அவர்களுடைய பக்கசார்பினை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாலும் ஆர்ரி இந்த ஊடகங்களுக்கு இடைஞ்சலாகச் செயற்படுகின்றது.

அல்ஜஸீரா தொலைக்காட்சியை முடக்குவதற்காக மேற்கு நாடுகளும் அதன் ஊடகங்களும் கட்டார் க்கு எதிராக சவுதிய அரபெpயாவுடன் இணைந்து போர் தொடுக்க முனைந்தமை தெரிந்ததே.

மார்ச் 04 இல் ரஸ்ய இரட்டைத்தர உளவாளியும் அவருடைய மகளும் நரம்பினைத் தாக்குகின்ற நஞ்சூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எவ்வித விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட முன்னரேயே ஊடகங்களும் அரசியல் வாதிகளும் ரஸ்யா மீது பழிசுமத்தி இருந்தனர். நேற்று நள்ளிரவுக்கு முன்பாக ரஸ்யா பதில் தராவிட்டால் ரஸ்யாவுக்கு எதிராக கடுமையான விரைந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிதத்தானிய பிரதமர் திரேஸா மே எச்சரித்து இருந்தார்.

பிரித்தானியாவின் எச்சரிக்கையை உதாசீனம் செய்த ரஸ்ய ஆட்சித் தலைவர் விளாடிமீர் புட்டீன் ரஸ்யாவிற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தாங்கள் நிச்சயம் பதில் நடவடிக்கை எடுப்போம் என்றும் எச்சரித்து இருந்தார்.

பிரித்தானியாவில் இருந்து ரஸய ராஜதந்திரிகள் வெளியேற்றப்பட்டால் ரஸ்யாவில் உள்ள பிரித்தானிய ராஜதந்திரிகள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் ஆர்ரி பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டால் ரஸயாவில் உள்ள பிரித்தானிய ஊடகவியலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் ரஸ்யா எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு