மதஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கிகளை பாவித்தால் நடவடிக்கை – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்


994px-Cone-speakerமதஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கிகளை பாவித்தால் குற்றவியல் தண்டனை கோவை பிரிவு 98 கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (15.03.2018) வியாழக்கிழமை பொலிஸ் அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் , அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

மத ஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கி பாவனைகள் காணப்படுவதாக பல முறைபாடுகள் கிடைக்க பெற்று உள்ளன. அதனால் வயதானவர்கள் , மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அது தொடர்பில் இன்றைய தினம் பொலிசாரிடம் எடுத்து கூறினேன். இனி அவ்வாறு உச்ச தொனியில் ஒலிபெருக்கி பாவனை இருந்தால் அது தொடர்பில் குற்றவியல் தண்டனை கோவை பிரிவு 98 கீழ் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கூறியுள்ளேன் என தெரிவித்தார்.

உங்கள் கருத்து
  1. BC on March 17, 2018 4:30 pm

    நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட பகுதி முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொன்னது பாராட்டுக்கு உரியது
    உச்ச தொனியில் மத பிரசாரம் செய்ய ஒலிபெருக்கிகளை பாவிப்பது இலங்கையில் தடை செய்யபட வேண்டும்.


  2. Mohamed SR Nisthar on March 26, 2018 10:17 am

    வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக்கள்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு