ஈபிடிபியின் ஆதரவுடன் பருத்தித்துறை நகர சபையிலும் த.தே.கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ளது.


Poin-pedro (1)ஈபிடிபியின்  ஆதரவுடன் பருத்தித்துறை நகர சபையிலும் த.தே.கூட்டமைப்பு  ஆட்சியமைத்துள்ளது.

இன்று(27) காலை ஒன்பது மணிக்கு உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில்  ஆரம்பமான கூட்டத்தில் பகிரங்க வாக்கெடுப்புக்கு  பெரும்பான்மை  ஆதரவு கிடைத்தமையினை தொடர்ந்து  த.தே.கூட்டமைப்பு ஜோசப் இருதயராஜாவை தவிசாளராக  முன்மொழிந்தது  இதேவேளை த.தே. ம. முன்னணி கணபதிபிள்ளை பாலசுப்பிரமணியத்தை முன்மொழிய வாக்கெடுப்புக்கு  சென்றது.

வாக்கெடுப்பில்  த.தே. மக்கள் முன்னணியின் ஆறு  உறுப்பினர்களும்  த.தே. ம. முன்னணி கணபதிபிள்ளை பாலசுப்பிரமணியதிற்கு வாக்களிக்க த.தே.கூட்டமைப்பு  ஜந்து உறுப்பினர்களும், ஈபிடிபியின் இரண்டும் உறுப்பினர்களும் சேர்ந்து ஜோசப் இருதயராஜாவுக்கு வாக்களித்தமையினால்  ஒரு வாக்கு வித்தியாசத்தில் த.தே.கூட்டமைப்பு  ஆட்சியமைத்துள்ளது.

இதன் போது கேடயச்சின்னத்தில் போட்டியிட்ட உறுப்பினர் ஒருவரும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட உறுப்பினர் ஒருவரும் நடுநிலைமை வகித்துள்ளனர்.

இதேவேளை சாவகச்சேரி நகர சபையும் ஈபிடியின்  ஆதரவுடன் த.தே.கூட்டமைப்பு வெற்றிப்பெற்றுள்ளது

உங்கள் கருத்து
  1. BC on March 27, 2018 11:19 am

    தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவைப் பெற்றுக் கொண்டமை சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுவிட்டது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது என்று வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார் அதிகாரம் பெறுதல் சுய இலாபம் அடைதல் அதிகாரம் பெற்று தங்கள் குடும்பங்களை ஆகா ஓகோ என்று வாழ வைத்தல் என்ற தமது அடிப்படை கொள்கை வழியில் கூட்டமைப்பு செயல்பட்டு கொண்டு இருக்கிறது தமது அடிப்படை கொள்கையை கைவிட்டுவிட்டுவிட கூட்டமைப்பு தயாராக இல்லை என்பதை உணரமுடியும்.
    ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சு நடத்தக் கூடாது என்று சம்பந்தன் அய்யா ஓடர் போட்டுள்ளாராம் என்ற நகைச்சுவை எதற்காக?


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு