சம்பந்தன் இருக்கும் வரையில் ரணிலை அசைக்க முடியாது


Gunadasa_Amarasekara_1-576x392தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இருக்கும் வரையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தேசிய அரசியலில் இருந்து அசைக்க முடியாது என தெரிவித்துள்ன தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், பிரதமருக்க எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையில் மஹிந்த ராஜபக்ஷ படுதோல்வியினை எதிர்கொள்வார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேலும் தெளிவுப்படுத்துகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு  எதிராக செயற்படமாட்டாது. நாட்டு நன்மை கருதாது தமது சுய நல கொள்கைகளை மாத்திரம் நிறைவேற்றிக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தி வருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நம்பிக்கையில்லா பிரேரனை விவகாரத்தில் கூட்டு எதிர்கட்சிக்கு எதிராகவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவும் தமது தீர்மானத்தினை வெளிப்படுத்தும் என தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு