தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவுடன் மன்னார் பிரதேச சபையைக் கைப்பற்றியது ஜதேக


30629143_2092722027631954_5455969077199634432_o-750x400மன்னார் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

-இதன் போது மன்னார் பிரதேச சபையின் தலைவராக ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் எஸ்.எச்.முஜாஹிர் மற்றும் உப தலைவராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். இஸ்ஸதீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு இன்று செவ்வாய்க்கிழமை(10) மாலை 2.30 மணியளவில் மன்னார் பிரதேச சபையில் உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த சபையின் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் எஸ்.எச்.முஜாஹிர் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் கொன்சஸ் குலாஸ் ஆகிய இருவரும் முன் மொழியப்பட்டனர். -இதன் போது மன்னார் பிரதேச சபையின் 21 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவளித்த நிலையில் வாக்கெடுப்பு இடம் பெற்றது.

-இதன் போது ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் 11 வாக்குகளையும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் கொன்சஸ் குலாஸ் 10 வாக்குகளையும் பெற்றுள்ள நிலையில் அதி கூடிய வாக்குகளை பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இவருக்கு ஆதரவாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் எஸ்.அந்தோனிப்பிள்ளை வாக்களித்துள்ளார். இதனைத்தொடர்ந்து உப தலைவர் தெரிவு இடம் பெற்றது. உப தலைவர் தெரிவின் போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் எம்.இஸ்ஸதீன் மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் எம்.தர்சீன்; ஆகியோர் முன் மொழியப்பட்டனர்.

அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். இஸ்ஸதீன் 11 வாக்குகளையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் எம்.தர்சீன்; 9 வாக்குகளைப் பெற்றிருந்தார். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஜே.இன்சாப் வாக்களிக்காது நடு நிலை வகித்தார்.

அதி கூடிய வாக்குகளை பெற்ற சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். இஸ்ஸதீன் மன்னார் பிரதேச சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த அமர்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன்,பிரதி அமைச்சர் அமீர் அலி , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், மாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம் , ஹீனைஸ் பாரூக்,முத்தலீப் பாரூக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு