புதுவருட பிறப்பிலும் 421 நாளாக வீதியில் சமைத்து உண்டு உறவுகளை தோடும் உறவுகள்


30727615_1414968891941499_8784949935716958208_nபுதுவருடப் பிறப்பான இன்று 421 நாளாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய  முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வருடம் பெப்ரவரி  20 ஆம் திகதி  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டமே இன்று(14) 421 நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இன்றைய தமிழ் சிங்கள் புது வருடப் பிறப்பிலும் தங்களின் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும்  உறவுகள்  வீதியோரத்தில் சமைத்து உண்டு போராடி வருகின்றனர். எல்லாத் தரப்பினர்களும் தங்களை கைவிட்டுவிட்டதாக தெரிவிக்கும் காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் வலியை தங்களை தவிர வேறு எவரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை என்றும் அவர்கள்  கவலை தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க கூடிய இறுதி வாய்ப்பையும் எங்களுடைய மக்கள்  பிரதிநிதிகள் தவறவிட்டுள்ளனர். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது  பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்  எங்களது விடயம் தொடர்பில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்.  காணாமல் ஆக்கப்பட்டவர்கள எவரும் உயிரோடு இல்லை என  யாழ்ப்பாணத்தில் வைத்து  தெரிவித்த பிரதமரிடம் எங்களது விடயம் தொடர்பில் உறுதிப்பாட்டை  பெற்றுக்கொள்ளாது அவரை  வாக்களித்து காப்பாற்றியது எங்களுக்கு செய்த துரோகம் என கிளிநொச்சி  காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்பின் இணைப்பாளர் திருமதி ஆனந்தநடராஜா லீலாதேவி தெரிவித்தார்
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு