விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் விடுதலை செய்யப்படவில்லை ; புலனாய்வு அமைப்பு மறுப்பு


LTTE_CIஇலங்கை சிறையில் தடுத்துவைக்கபட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என  வெளியாகியுள்ள செய்திகளை புலனாய்வு அமைப்புகள் மறுத்துள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினரான மொறிஸ் என்பவர் விடுதலை செய்யபபட்டுள்ளார் என்ற தகவலையே அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பொட்டுஅம்மானின் நெருங்கிய சகாவான மொறிஸ்  இலங்கை சிறைச்சாலையொன்றில் விசாரணையை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பல முக்கிய தாக்குதல்களின் சூத்திரதாரி இவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இவர் விடுதலையாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அதனை புலனாய்வு அதிகாரிகள் மறுத்துள்ளதாகவும் ஆங்கில இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு