அணுவாயுதங்களை அகற்றுவதற்கு கொரிய தலைவர்கள் இணக்கம்


north_-south_koreaaaaaaகொரிய தீபகற்பத்திலிருந்து அணுவாயுதங்களை அகற்றுவது என வடகொரிய தென்கொரிய தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

வடகொரிய தென்கொரிய ஜனாதிபதிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாட்டின் பின்னர் கிம் ஜொங் அன்னும் மூன் ஜேயும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் இதனை தெரிவித்துள்ளனர்.

சமாதான உடன்படிக்கையொன்றை உத்தியோகபூர்வமாக ஏற்படுத்துவதற்காக தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதாக இரு ஜனாதிபதிகளும் தெரிவித்துள்ளனர்

கொரிய யுத்தத்தின்போது பிரிக்கப்பட்ட குடும்பங்களின் மனிதாபிமான பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வடகொரிய தென்கொரிய ஜனாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கொரிய தீபகற்பத்தில் காணப்படும் பதட்டநிலையை குறைப்பதற்காக இரு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கூட்டறிக்கையில் தெரிவித்துள்ள ஜொங் அன்னும் மூன் ஜேயும் இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சர்கள் மத்தியிலான சந்திப்பு இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை தென்கொரிய ஜனாதிபதி வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்வார் எனவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு