மக்களுக்கு சேவை செய்ய அமைச்சு பதவிதான் வேண்டும் என்றில்லை


images6-720x450நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் 11 உள்ளூராட்சி சபைகளையும் இ.தொ.கா. ஆட்சிசெய்யுமென கடவுளும் மக்களும் முடிவெடுத்துள்ளதாக இ.தொ.கா. தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று ஹட்டன் டிக்கோயா நகர சபையில் இடம்பெற்ற சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

இதன்போது நுவரெலியா மவாட்ட பராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட மத்திய மாகாண இந்து கலாசார மற்றும் தமிழ் கல்வி அமைச்சர், ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் சடையன் பாலச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மேலும் உறையாற்றிய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான்,

தேர்தல் காலங்களில் மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதன்அடிப்படையில் அதற்கான சேவைளை செய்ய உலக வங்கியோடு பேச்சவார்த்தையில் ஈடுபட்டு ஹட்டன் நகரை அபிவிருத்தி செய்வதற்கு நிதிகளை கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கான சேவையை தொடர்ந்து செய்து கொண்டே வரும். இதற்கு அமைச்சு பதவி தான் வேண்டும் என்பது இல்லை.

அமைச்சு பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மக்களுக்கான பணிகள் தொடர்ந்து வரும் என்பதை கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது என ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு