அமைச்சரவை மறுசீரமைப்பு பொதுமக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அல்ல


Namal-097அமைச்சரவை மறுசீரமைப்பு என்பது அதன் அதிகாரத்தை மேலும் பலப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் ஒரு திட்டமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் நேற்று (01) கருத்து தெரிவித்த அவர், புதிய அமைச்சரவையில் மறுசீரமைப்பு, விஞ்ஞான அடிப்படையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பு, அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியே அன்றி பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிணைமுறி திருடர்களைப் பற்றி அரசாங்கம் இப்போது பேசுவதில்லை, அது மட்டுமல்லாமல் அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதற்கு அவமானம் என கூறிய அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இது போன்ற செயல்களால் தான் பொதுமக்கள் அரசியல்வாதிகளை விமர்சிக்கிறார்கள்.

இது நாட்டில் உள்ள அரசியலை சீர்குலைக்கும் வேலையாகும். இப்போது திருடர்கள் ஒன்று சேர்ந்து தான், திருடர்களை பிடிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு