ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு


1525421326-army-Lஇறுதி யுத்தத்தில் தமது உயிர்களை நாட்டிற்காக தியாகம் செய்த முப்படையினரையும் கௌரவிக்கும் விதமாக, ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் இன்று (04) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வு யாழ். பலாலி படைத்தலைமையகத்தில் உள்ள இராணுவ நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ரனவிரு சேவா சங்க தலைவி அனேமா பொன்சேகா மற்றும் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இதன்போது இராணுவ வீரர்களின் நினைவுத்தூபிக்கு முப்படையினரினால் மரியாதை செலுத்தப்பட்டதுடன் பிரதம அதிதிகளினால் நினைவுத் தூபிக்கு மலர்ச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், சர்வ மத வழிபாடுகளும் இங்கு இடம்பெற்றதுடன் முப்படை வீரர்கள் நினைவாக நூல் மற்றும் கொடி என்பனவும் வெளியிடப்பட்டது.

யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி, வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்தினாதன், யாழ் இந்திய உயர்ஸ்தானிகர் பாலச்சந்திரன், சர்வ மத தலைவர்கள். யாழ். மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள், பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு