நுண் கடனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மட்டக்களப்பில் யுவதி தற்கொலை


downloadநுண் கடன் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே நியூஸ்ஃபெஸ்ட் பல சந்தர்ப்பங்களில் செய்தி வெளியிட்டிருந்தது.

மட்டக்களப்பு – பேத்தாழையில் நுண் கடன் தொடர்பில் எழுந்த மன உளைச்சலால் உயிருக்கு விடைகொடுத்த ஒரு யுவதியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது.

23 வயதான பஞ்சாட்சரவடிவேல் நோஜிதா எனும் இந்த யுவதியின் சடலம் கடந்த புதன்கிழமை (02) மீட்கப்பட்டிருந்தது.

நுண் கடனை செலுத்த முடியாமையால் எழுந்த பிரச்சினையே இவரது மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குறிப்பிட்டனர்.

பெற்றோர் வெளிநாடு சென்ற நிலையில், இவர் சகோதரர்களுடன் வாழ்ந்து வந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

இத்தகைய உயிரிழப்புக்கள் இனியும் நேரலாம்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உறுதியளித்தவாறு சிறந்த கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு