மஹிந்த ஆட்சியில் பெறப்பட்ட கடனே தேசிய அரசாங்த்தின் வேலைத்திட்டத்திற்கு தாமதம் – சம்பிக்க


1517203339-3-patali-champikaதேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு கடன்களை இன்று வரை மீள் செலுத்து வருவதனால்  மறக்கப்பட்டுள்ளது என ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் தலைவர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் மேதின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை புதிய நகர மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

1978 ஆம் ஆண்டிற்கு பிறகு  கொழும்பு நகரில்  வரையறுக்கப்பட்ட நிலையிலேயே  தனி குடியிறுப்புக்கள் அமைக்கப்பட்டது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  மற்றும் சந்திரிக்காவின்  ஆட்சிக் காலத்தில்  7000 குடியிறுப்புக்கள் மாத்திரம் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் தேசிய அரசாங்கத்தின் குறுகிய காலக்கட்டத்தில் 9000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளமை பாரிய வெற்றியாகும்.

மே முதலாம் திகதி சர்வதேச மட்டத்தில் அனுஷ்டிக்கப்படுகின்ற மே தினம் இன்முறை சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டு இன்று கொண்டாடப்படுகின்றது. இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்ற விடயத்தினை உழைக்கும் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் இவ்விடயத்தினை எதிரணியினர் முழுமையாக அரசியல் மயமாக்கிவிட்டனர்.

தேசிய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு முன்வைத்த வாக்குறுதிகள் முழுமையடையவில்லை என்று பலர் குற்றம் சுமத்துகின்றனர். கடந்த கால அரசாங்கம் வெளிநாடுகளில் பெற்ற கடன்களை தேசிய அரசாங்கமே இன்றுவரை மீள்செலுத்தி வருகின்றது. கடந்த கால அரசாங்கத்தின் கடன்களை விரைவில் மீள் செலுத்த வேண்டிய தேவை தேசிய அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது. இல்லாவிடின் எமது சர்வதேச மட்டத்தில் வெட்கித்தலைக்குனிய நேரிடும். அரசாங்கம் குறுகிய காலத்தில் நாட்டின் அபிவிருத்திகளை மேம்படுத்தியதுடன், வெளிநாட்டு கடன்களையும் மீள் செலுத்தியுள்ளது.

கொழும்பு நகரில் ஒரு நாள் கூலியை பெறும் நோக்கில் கஸ்டப்பட்டு உழைக்கும் வர்க்கத்தினர் பெருமளவில் காணப்படுகின்றனர். இவர்களின் நலன்களை பேனும் பல காப்புறுதி திட்ட்ஙகள் கடந்த வருடம் ஆரபம்பிக்கப்பட்டு இன்றுவரை சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று கொழும்பு நகரில் 75 சதவீதமான மக்கள் சேரிபுற குடியிறுப்புக்களிலேயே வாழ்கின்றனர். இப்பிரதேசங்களிலேயே அதிகமான சட்டவிரோத தொழில்களும் இடம்பெறுகின்றன. இவற்றினை தேசிய அரசாங்கத்தினை தவிர எந்த அரசாங்கமும் கவனத்தில் கொள்ளவில்லை.

தற்போது கொழும்பு நகர் உள்ளிட்ட 5 உப நகரங்கள் பாரிய அபிவிருத்திகள் அடைந்துள்ளது. இப்பிரதேசங்களில் வாழும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளான திண்ம கழிவகற்றல் பிரச்சினைகளுக்கு 2023 ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்படும் .கடந்த கால அரசாங்கம் பெருந்தெருக்களை மாத்திரம் அபிவிருத்தி செய்வதை நோக்காக கொண்டு மனிதர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண மறந்து விட்டது. ஆனால் இன்று தேசிய அரசாங்கம் அனைத்து துறைகளிலும் அபிவிருத்திகளை பகுதியளவில் மேற்கொள்ளும் போது குறைகளை கண்டு குற்றம் சுமத்தி வருகின்றது.

தேசிய அரசாங்கத்தின் பிரதான நோக்கம் 2023 ஆம் ஆண்டுக்குள்  வாடகை வீட்டில் வாழும் மக்களுக்கு சொந்த அனைத்து வசதிகளும் கொண்ட தனிவீட்டினை நிர்மாணித்துக் கொடுப்பதாகும். 2020 ஆம் ஆண்டுக்குள்  ஆரம்பிக்கப்பட்ட  அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் முழுமைப் பெறும் என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு