தலவாக்கலையில் இரண்டு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்


image_6f55a2cc0bதலவாக்கலை நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின நிகழ்வு இடம்பெற்ற அதேவேளை நுவரெலியாவில் இ.தொ.காவின் மேதினம் இடம்பெற்றது.

இதன்போது ஹட்டன் பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு பேருந்தில் சென்ற இ.தொ.கா ஆதரவாளர்கள் கோஷமிட்டதாகவும், இதனை எதிர்த்து த.மு.கூட்டணியின் ஆதரவாளர்கள் சிலர் அவர்களை மறைத்து வாய் தர்க்கத்தில் ஈடுப்பட்டதால் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் கலகம் அடக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டதையடுத்து, நிலைமை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு