துமிந்த சில்வாவின் மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு


1525778317-duminda-Lபாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட பிரதிவாதிகள் நால்வரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதம நீதியரசர் பிரயசாத் டெப் உள்ளடங்கிய ஐவர் கொண்ட நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இங்கு பிரதிவாதிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

பின்னர் வழக்கின் மேலதிக விசாரணைகள் இம்மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மை தீர்மானத்திற்கு அமைவாக தமக்கு மரண தண்டனை விதிக்கப்பட்மை சட்டத்திற்கு மாறானது என்று மேன் முறையீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு