ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் பொன்சேகா


image_65406ae9f5நிலையான அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி , வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக்கோரியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பகல் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பு நிறைவுற்றதன் பின்னர் அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் சிலர் சென்று இவ்வாறு மன்னிப்புக்  கோரியுள்ளதாக  தகவல்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சர் சரத் பொன்சேகா கடந்த 3ஆம் திகதி தனது புதிய அமைச்சினை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதியை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் இதுதொடர்பில் ஜனாதிபதியும் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு