ஈரான் ஆன்மீகத்தலைவரை சந்தித்த ஜனாதிபதி மைதிரி


1526299426-Ayatollah-Ali-Khamenei-Lஈரானிற்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

டெஹரான் நகரில் நேற்று (13) பிற்பகல் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதிக்கு சிநேகபூர்வமான வரவேற்பளித்தார்.

ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால உறவினை வலுவோடு முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது சுட்டிக்காட்டிய ஈரானின் ஆன்மீகத் தலைவர், இருநாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை போன்றே மக்களுக்கிடையிலும் தொடர்புகளை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

பூகோள ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களைக் கொண்டுள்ள இருநாடுகளும் தமது அபிவிருத்தி வாய்ப்புக்கள் குறித்தும் செயற்பட வேண்டுமெனவும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் தெரிவித்தார். மேலும் இலங்கை தேயிலை மீது தான் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இரு நாட்டு மக்களினதும் எண்ணங்களில் ஒற்றுமைகள் காணப்படுவதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் மூலமாக தாம் அறிந்துகொண்டதாகவும் ஈரானிய ஆன்மீகத் தலைவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு