யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதலை தடுக்க விசேட வேலைத்திட்டம்


imagesயானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்களில் மனிதர்களைப் போலவே யானைகளும் உயிரிழக்கும் பிரச்சினைக்குத் தீர்வாக விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, வலுவாதார அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் பல கலந்துரையாடல்கள் இதுவரையில் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரச்சினைகள் காணப்படும் பிர​தேசங்களுக்கு நேரடியாகச் சென்று, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு