இந்திய இராணுவத்தின் உயரதிகாரி இலங்கைக்கு விஜயம்


1526275775-india-Lஇந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஜெனரல் பிபின் ரவாட் 7 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கு இராணுவத்தளபதி லுதினன் ஜெனரல் சேனநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்திய இராணுவத்தின் உயரதிகாரி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

நேற்று (13) மாலை இலங்கை வந்த அவருக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.

ஜெனரல் பிபின் ரவாட் மற்றும் அவருடன் வருகை தந்துள்ள குழுவினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு