பஸ் கட்டணத்தை 6.56% ஆல் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி


bus-fareபஸ் கட்டணங்களை 6.56 வீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன், மிகக் குறைந்தபட்ச கட்டணமாக தற்போது அறவிடப்படும் ரூபா 10 இல் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம், சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எரிபொருள்களின் விலை அதிகரிப்பை அடுத்து, இன்றைய (15) தினத்திற்குள் குறைந்தபட்ச கட்டணத்தை ரூபா 15 ஆகவும், பஸ் கட்டணங்களை 15 – 20% இனால் அதிகரிக்கவும், தனியார் பஸ் சங்கங்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின், நாளைய தினம் (16) முதல், பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், தற்போது அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள பஸ் கட்டண அதிகரிப்பு, எதிர்பார்த்த வகையில் இல்லை என்பதால், இது குறித்தான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் பஸ் சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு