“முன்னோக்கி நகர்வோம்’’ அங்குரார்ப்பண நிகழ்வு


image_2e9d2d2fc5வடமாகாண மக்களின் “முன்னோக்கி நகர்வோம்” எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தலைமையில், இச் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போர் நிறைவடைந்து 10 ஆண்டுகளான நிலையில், வடமாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களுக்கு  வினைத்திறனான சேவை வழங்கல் தொடர்பில் மாகாண சபையும், மத்திய அரசாங்கத்தின் நிறுவனங்களும் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் வடமாகாண சபை முக்கிய வகிபாகம் வகிக்கின்றது. இந்நிலையில் மத்திய, மாகாண அரசாங்கங்கள் வழங்குகின்ற சேவையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை இவ்வலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.

இவ்வலுவலகம் யாழ்.கைலாசபதி பிள்ளையார் ஆலய பின் வீதியில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் அ.பரம்சோதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு