இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுதலை


Tamil_Daily_News_34278070927கடல் எல்லைத் தாண்டிய குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 இலங்கை மீனவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை செய்யப்பட்டு, நேற்று (15) காரைக்காலிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இந்திய கடலோர பொலிஸாரினால் கடந்த மார்ச் 12 ஆம் திகதி நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கைது செய்யப்பட்ட திருகோணமலை பகுதியைச் சேர்ந்த தனுஷ்கர், மதுரங்க, ரணில், அருண், டிலான் ஆகியோரே இவ்வாறு இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் 5 பேரையும், சர்வதேச கடல் பரப்பில் வைத்து நேற்று (15) இலங்கை கடற்படையினரிடம் இந்திய கடலோர பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் ஐவரையும் இலங்கை கடற்படையினர் யாழ். மீன்பிடித்துறையின் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு