“இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து விட்டன.”- லண்டனில் ராகுல்காந்தி !

“இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை பிரச்சினை குறித்து யாரும் பேசுவதில்லை.” என இங்கிலாந்தின் லண்டனில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் – எம்.பி.யுமான ராகுல்காந்தி ஒரு வார பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் போதே பேசிய ராகுல்காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஜனநாயகம் மீதான தாக்குதலை நாங்கள் தடுக்க முயற்சித்து வருகிறோம். எனது செல்போனில் பெகசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிறைய அரசியல்வாதிகளின் செல்போன்களில் பெகசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்லது. செல்போனில் பேசும்போது கவனமாக பேசும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டது’ என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஹார்ட்வார்ட் கென்னடி பள்ளி தூதரும், அமெரிக்க முன்னாள் தூதருமான நிலோலஸ் பர்ன்ஸ் உடன் ராகுல்காந்தி  காணொளி மூலம் கலந்துரையாடினார். அப்போது, இந்தியாவில் நடப்பதை பார்த்தும் அமெரிக்கா அமைதியாக உள்ளது என்று ராகுல்காந்தி கூறினார். அமெரிக்க தரப்பில் இருந்து எந்த கருத்தையும் நான் இதுவரை கேட்கவில்லை. ஜனநாயகத்தில் கூட்டாளிகள் என்று நீங்கள் கூறினீர்கள் என்றால் இந்தியாவில் நடப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று அமெரிக்க முன்னாள் தூதரிடம் கேட்டார்.

நிலோலஸ் பர்ன்ஸ் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா அமைதியாக இருப்பதாக கூறினார்.

இந்நிலையில், லண்டனில் சென்றுள்ள ராகுல்காந்தி , இந்தியாவில் 3 மிகப்பெரிய பிரச்சினைகள் உள்ளது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகிய இரண்டு மிகப்பெரிய பிரச்சினையாகும். 3-வது பிரச்சினையான பெண்களுக்கு எதிரான வன்முறை இந்தியாவில் மறைக்கப்பட்ட பிரச்சினையாகும். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை பிரச்சினை குறித்து யாரும் பேசுவதில்லை. ஆனால், இந்தியா முழுவதும் நடந்து சென்று பார்த்தால் மக்களிடம் பேசினால் பெண்களுக்கு எதிரான வன்முறை மறைக்கப்பட்ட பிரச்சினையாக உள்ளது’ என்றார்.

இதேநேரம் லண்டன் சென்றுள்ள ராகுல்காந்தி இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று கூறுவதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதுடன்  ராகுல்காந்தியின் லண்டன் பேச்சுக்கு மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *