தெற்கில் பரவும் வைரஸால் மற்று​மொரு குழந்தை உயிரிழப்பு


ht2476தென் மாகாணத்தில் பரவும்  ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக, காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில், சிகிச்சைப் பெற்று வந்த குழந்தை ஒன்று நேற்று இரவு உயிரிழந்துள்ளது.

1 வயதும் 7 மாதங்களும் நிரம்பிய குறித்த குழந்தை மாத்தறை- திஹகொட பிரதேசத்தைச் சேர்ந்தென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக காலி கராப்பிட்டிய ​போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த குறித்த குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளது.

இதேவேளை இந்த மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தென் மாகாணத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு