வாள்வெட்டுக்குழுக்களை சட்டத்தரணிகள் புறக்கணிக்க வேண்டும்


nnவாள்வெட்டுக் குழுக்களுக்காக சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் ஆஜராகாது புறக்கணிக்க வேண்டும்” என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா சட்டத்தரணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிராந்திய பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் பத்திரிகை விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக்கண்டித்து இன்று (30)  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சட்டத்தரணிகள், வாள்வெட்டுக் குழுக்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகாது புறக்கணிக்க வேண்டும். சட்டத்தரணிகள் அனைவரும்  வாள்வெட்டுக் குழுக்களின் வழக்குகளில் ஆஜராகமாட்டோம் என தீர்மானித்தால், வாள்வெட்டுக் குழுக்கள் சிறைச்சாலைகளில் இருந்து வெளியே வர முடியாது.

நாங்கள் அரசையும் மற்றவர்களையும் குறை கூறுவதை விடுத்து, எங்களை நாங்கள் திருத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு