திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமையேற்பு


M-Ilanchelian-Assumed-Duty-at-Trincomalee-4யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இடமாற்றம் பெற்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நேற்று (30) உத்தியோகபூர்வமாக தனது கடமையயை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கில் மீண்டும் சூரியன் உதித்து விட்டது” என்ற கோஷத்துடன் திருகோணமலை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் வரவேற்பு நிகழ்வு இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயுதம் தாங்கிய பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா மற்றும் பதிவாளர்கள், சட்டத்தரணிகள், ஊழியர்கள் என பலரும் மாலை அணிவித்து அவரை வரவேற்றனர்.

தமது கடமையயைப் பொறுப்பேற்ற அவர், நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பாகவும், நீதிமன்றங்களின்மேல் மக்கள் வைக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் இரண்டு மணித்தியாலங்கள் சிநேகபூர்வமாக கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு