20 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணைக்கு எதிர்ப்பு: ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தீர்மானம்


downloadமக்கள் விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் தீர்மானித்துள்ளன.

நேற்று (30) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு வேட்பாளர் ஒருவரை முன்மொழிவது தொடர்பில் நேற்றைய தினம் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது குறித்து அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரிடமும் எதிர்க்கட்சியிலுள்ள ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் 16 பேர் கொண்ட குழுவிடம் கலந்துரையாடுவதற்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு