நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் வெளியேற்றப்பட்டார் ஸ்பெயின் பிரதமர்


Spain-PM-reuஸ்பெயின் பாராளுமன்றத்தில் பிரதமர் மரியானா ரஜாய் மீது எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதை அடுத்து இன்று நடந்த வாக்கெடுப்பு மூலம் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஸ்பெயின் நாட்டின் பிரதமராக மரியானா ரஜாய் பதவி வகிக்கிறார். சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவரது கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவருக்கு சுமார் 33 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.

இதையடுத்து பிரதமர் ஊழலை தடுக்க முடியவில்லை என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதுதொடர்பாக ஸ்பெயின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், ரஜாய் பதவி விலக வேண்டும் எனவும், ரஜாய் பிரதமராக இருப்பது மக்களுக்கு மட்டுமன்றி அவரது கட்சிக்குமே சுமையாக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சான்செஸ் கூறினார்.

இதனை அடுத்து ரஜாய் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ரஜோய்க்கு 176 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், அவருக்கு வெறும் 169 வாக்குகள் மாத்திரமே கிடைத்த நிலையில் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 180 பேர் ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் புதிய  பிரதமராக சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் பெட்ரோ சான்ஷேஸ் பதவியேற்றுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு