சிங்கள மீனவர்களை வெளியேற்றுங்கள்- சுமந்திரன் கோரிக்கை


download-1-12வடமராட்சி கிழக்கு  மருதங்கேணி பகுதியில் அத்துமீறி தங்கி மீன்பிடித்தொழிலில்  ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்கள் எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குள்  அரசாங்கம் வெளியேற்றவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருதங்கேணியில் தமிழ் மக்களிற்கு சொந்தமான நிலத்தில் நூற்றுக்கணக்கான  வாடிகளை அமைத்துக்கொண்டு பெருமளவு சிங்கள மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடமராட்சி கிழக்கு மீனவர்கள் அவர்களை வெளியேற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக தாங்கள் புலனாய்வுபிரிவினரின் கொலை மிரட்டலிற்கு உள்ளாகியுள்ளதாக  பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு