குற்றம் இழைத்தோருக்கு தராதரம் பாராது கடுமையான நடவடிக்கை எடுப்போம்


3_V_Akila_Viraj-2அர்ஜூன அலோசியஸிடம் இருந்து நான் பணம் வாங்கவில்லை. அந்த பட்டியலில் நான் இல்லை. அதற்கான தேவையும் எனக்கில்லை. என்றாலும் 118 பேர் அர்ஜூன அலோசியஸூடன் தொடர்புக் கொண்டு பணம் பெற்றதாக கூறப்படுகின்றது. இதன்போது அலோசியஸூடன் சாதாரண உறவினை மீறி பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது குற்றம் இழைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் தராதரம் பராமல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கி மோசடியுடன் சம்பந்தப்பட்ட அர்ஜூன அலோசியஸூனுடன் தொடர்பு வைத்துக்கொண்டு 118 பேர் பணம் பெற்றதாக கூறப்படுகின்றது

இந்த பட்டியலில் நான் இல்லை. அர்ஜூன அலோசியஸிடம் நான் பணம் வாங்கவில்லை.  அதற்கான தேவை எனக்கு ஒருபோதும் இல்லை. இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் பட்டியலை வெளியிடும் வரை எம்மால் எதுவும் கூற முடியாது. என்றாலும் அரசியல்வாதி என்ற வகையில் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் அரசியல் செய்ய முடியாது. ஆனால் அந்த தொடர்பினை கொண்டு தவறுகள் செய்ய முடியாது. ஊழல் மோசடிகளில் ஈடுப்பட முடியாது.

எனவே வர்த்தக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வர்த்தகர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ளவதில் எந்த தவறுகள் இல்லை. அதற்கு மாறாக அவருடனான தொடர்புகளின் போது குற்றம் இழைத்திருந்தால் அது குற்றமாகும்.

எனவே அர்ஜூன அலோசியஸூடனான தொடர்பினை கொண்டு யாராவது குற்றம் இழைத்திருந்தால் அவரகளுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் தராதரம் பராமல் நல்லாட்சி அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும். அதில் எந்தவொரு ஆட்சேபமும் இல்லை என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு