மஹிந்தவுக்கும் பொறுப்பு; ஶ்ரீ.ல.சு.க.செயற்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்


New-SLFP-Officials-Appointed-2ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யும், விசேட மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (03) இடம்பெற்றது.

கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கை தொடர்பான மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் குறித்த கூட்டம் கட்சியின் தலைவரான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், பத்தரமுல்லையிலுள்ள, அபேகம பகுதியில் இடம்பெற்றது.

இதில் ஶ்ரீ.ல.சு.கவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு கூட்டமும் இடம்பெற்றது.

தற்காலிகமான செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து, கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்வது என, இறுதியாக கடந்த மே மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற, சு.கவின் மத்திய செயற்குழுவில் முடிவு செய்தமைக்கு அமைய, கட்சிக்கு தற்காலிக உறுப்பினர்கள் தெரிவு செய்ய்பட்டனர்.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக புதிய நிர்வாக குழு இதன்போது தெரிவு செய்யப்பட்டது.

கட்சியின் தலைவராக மீண்டும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, ஶ்ரீ.ல.சு.க.வின் ஆலோசக சபையில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டனர்.

கட்சியின் பொதுச் செயலாளராக பேராசியர் ரோஹன லக்ஷமன் பியதாச தெரிவுசெய்யப்பட்டார்.

கட்சியின் தேசிய அமைப்பாளராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனெவிரத்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களாக ஏ.எச்.எம்.பௌசி, சரத் அமுனுகம, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, ரெஜினோல்ட் குரே, பியசேன கமகே, விஜித் விஜயமுனித டி சொயிஸா, மஹிந்த சமரசிங்ஹ, திலான் பெரேரா, தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய உப செயலாளர்களாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் பிரதியமைச்சர் சுதர்ஷனீ பெர்ணான்டோபுள்ளே, சுமேதா ஜீ. ஜயசேன ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய செயற்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் மத்திய குழுவிற்கு தெரிவு செய்யப்படும் ஏனைய நியமனங்கள் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு ஏற்ப நியமிக்கப்பட வேண்டியுள்ள அமைப்பாளர்கள், தொழில் வல்லுனர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு அமைப்புகளை எதிர்காலத்தில் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அதற்கமைய,
தலைவர் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
பொதுச் செயலாளர் - பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ
தேசிய அமைப்பாளர் - அமைச்சர் துமிந்த திஸாநாயக்க (முன்னாள் பொதுச் செயலாளர்)
சிரேஷ்ட உப தலைவர்கள்:

  • அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
  • டப்ளியூ.டி.ஜே. செனவிரத்ன எம்.பி.
  • அநுர பிரியதர்ஷன யாபா எம்.பி.
  • சுசில் பிரேமஜயந்த எம்.பி.

பொருளாளார் - எஸ்.பி. திஸாநாயக்க (முன்னாள் பொருளாளார்)
உப தலைவர்கள்:

  • ஏ.எச்.எம்.பௌசி
  • சரத் அமுனுகம
  • மஹிந்த அமரவீர
  • தயாசிறி ஜயசேகர
  • ரெஜினோல்ட் குரே
  • பியசேன கமகே
  • விஜித் விஜயமுனித டி சொயிஸா
  • மஹிந்த சமரசிங்ஹ
  • திலான் பெரேரா
  • சான் விஜயலால் டி சில்வா (தெ. மா. முதலமைச்சர்)
  • அங்கஜன் ராமநாதன் எம்.பி.

உப செயலாளர்கள்:

  • அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
  • சரத் ஏகநாயக்க (ம. மா. முதலமைச்சர்)
  • தர்மசிறி தஸநாயக்க (வட மே. மா. முதலமைச்சர்)
  • இசுரு தேவப்பிரிய (மே. மா. முதலமைச்சர்)
  • சாமர சம்பத் தஸநாயக்க (ஊ. மா. முதலமைச்சர்), – பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன
  • முன்னாள் பிரதியமைச்சர் சுதர்ஷனீ பெர்ணான்டோபுள்ளே
  • சுமேதா ஜீ. ஜயசேன

மத்திய செயற்குழு உறுப்பினர்கள்

  • ஸ்ரீ.ல.சு.க.வில் தற்போதுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும்
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு