குழந்தயை கடத்தி விற்பனை செய்த நகர சபை தலைவர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்


thlaதலவாக்கலை – லிந்துலை நகர சபை தலைவர் உள்ளிட்ட நால்வரையும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் பிரமித ஜயசேகர உத்தரவிட்டுள்ளார்.

குழந்தை கடத்தல், சட்டவிரோத குழந்தை விற்பனை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தலவாக்கலை – லிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபால உள்ளிட்ட நால்வர் நுவரெலியா பொலிஸாரால் நேற்று (03) கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, கடத்தப்பட்டு சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை இன்று (04) மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குழந்தையை சட்டவிரோதமான முறையில் வாங்கிய பெற்றோர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த மே மாதம் 25 ஆம் திகதி விசாரணைக்கு வந்த பொழுது குறித்த வழக்கு தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொண்டு 01.06.208 அன்று நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதன் அடிப்படையிலேயே தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் அசோக சேபால, ஜயந்த, மஞ்ஞநாயக, எச்.எம். திலகரட்ன ஆகியோரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் இன்று (04) நுவரெலியா நீதவான் பிரமித ஜயசேகர முன்னிலையில் ஆஜர் செய்யப்பட போது அவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன பஸ்நாயக்க தலைமையிலான பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு